பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதற் தடவையாக Arts Union நேற்று (30) உதயமானது. இவ்வாமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
இப்பாடசாலையில் இதுவரை காலமும் காணப்படாத Arts Union ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முதன் முயற்சியாக ஆசிரியர்களும், பழைய கலைப் பிரிவு மாணவர்களும், தற்போது கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு இதுவரையில் இப்பாடாசாலையில் கலைப் பிரிவில் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம் தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கல்வி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது விஷேட சொற்பொழிவை பாடசாலையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எம்.எச். அஹ்யார் (மதனி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு கலைப்பிரிவில் கல்வி கற்ற உள்நாட்டு, வெளிநாட்டில் இருக்கின்ற மாணவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(KMCC MEDIA UNIT)
No comments