Breaking News

கற்பிட்டி மனிதாபிமான சகோதரத்துவ நிறுவனத்தில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

" பெண்களில் முதலீடு செய்வோம் முன்னேற்றத்தை துரிதப்படுத்தவோம்"  என்ற ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டிற்கான கருப் பொருளுக்கு அமைய  கற்பிட்டி மனிதாபிமான சகோதரத்துவ நிறுவனத்தின் வளாகத்தினுள் நிறுவனத்தின் செயற்திட்ட பணிப்பாளரும் நிறைவேற்றுக் குழுவின் பொதுச் செயலாளருமான ஏ.எம்.எம் மஷுர் தலைமையில் இம்முறை  மகளீர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மனிதாபிமான சகோதரத்துவ நிறுவனத்தின் தேசிய தலைவர் கலாநிதி எஸ். பத்மராஜா கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக   கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்யூ.எஸ் எதிரிசிங்க, எச்.பி.எப் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உப தலைவர் அல்ஹாஜ் வை.எம்.எஸ் ஹமீத் , ஆகியோருடன் விசேட அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மஞ்சுலா, கற்பிட்டி பிரதேச கிராம உத்தியோகத்தர்களான றியாஸ், சஹீனாஸ்,விந்தா , தில்லையூர் மீனவ சங்க தலைவர் சபுருல்லாஹ்கான், கற்பிட்டி பிரதேச மகளீர் அபிவிருத்தி கூட்டுறவு சங்க தலைவி கே.றுவைஸா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பெண்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பொருளாதார, பால்நிலை, அச்சுறுத்தல்கள், வண்புனர்வுகளுக்கு உட்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளல் அதற்கான வழிமுறைகள் என்ன மற்றும் சுய முயற்சி அபிவிருத்தி குழுக்களை உருவாக்கி பொருளாதார ரீதியில் முன்னேறத்தை நோக்கி எவ்வாறு பயணித்நல் என்பன பற்றிய கலந்துரையாடல்களும்  இடம்பெற்றதுடன் பெண்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில் வழங்கப்பட்டதும். குறிப்பிடத்தக்கது.








No comments

note