Breaking News

புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய

நீதியான சமுகத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விஷேட  கலந்துரையாடல் கூட்டம் கடந்த (09)ஆம் திகதி புத்தளம் இசுறு ஹோட்டலில்  நீதியான சமுகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபா நாயகருமான கரு ஜெயசூரிய  தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்  இயக்கத்தின்   ஆய்வாளர் மற்றும் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர, ஜனாதிபதி ஆலோசகர் காமினி வியங்கொட  , வெளிவிவகார அமைச்சின் செயளாலர், தேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஆலோசகர் மற்றும் அரசியல் ஆய்வாளர் தூதுவர் அல்ஹாஜ் ஜாவித் யூஸுப் , பேராதனைப் பல்கலைக்கழக 

 விரிவுரையாளர், கொள்கை வகுப்பாளர் பிரசன்ன பெரேரா , சமயத் தலைவர்கள் கல்வியியலாளர்கள், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க செயளாலருமான பாலித்த ரங்கேபண்டார முன்னாள்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அஷ்ஷேய்ஹ் முஜீப் , முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்களான  ,றணீஸ் பதுர்தீன் , பாரூக் பதீன் ஆசிரியர், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், மற்றும் என்.டீ.எம். தாஹிர் , அமேசன் கல்லூரி பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார், முன்னாள்   நகர சபை , பிரதேச சபை உறுப்பினர்களான  பர்வீன் ராஜா,ஏ.ஓ. அலிக்கான், ஸமான், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். ரபாத் அமீன், கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் மற்றும் சமுக சேவையாளரும் தொழிலதிபர்  ரிஷாத் , மு.கா. , அ.இ.ம.கா, எஸ்.ஜே.பி, யு.என்.பி, என்பவற்றின் மாகாண சபை நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில்,சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள் கல்வியியலாளர்கள் போன்றோர் கலந்து கொண்டு  எதிர்காலத்தில் கல்வியின் ஊடாக  எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தலாம்  என்பது பற்றிய தமது ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர்.












No comments

note