Breaking News

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் நேற்று (29) வாழங்கி வைக்கப்பட்டுள்ள்ளது.


பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஹுதா லங்கா (HUDHA LANKA) நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எச். சிஹார் ஆசிரியரின் அயராத முயற்சியினால்  அவுஸ்திரேலியா நாட்டில்  வசித்துவருகின்ற சகோதர இனத்தைச் சேர்ந்த ஹேமந்த அவர்களின் சொந்த நிதியிலிருந்து ரீட்மா பவுண்டேஷன்  ஊடாக சுமார் பத்து இலட்சம் பெறுமதியில் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் 310 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ள்ளது.


அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹுதா லங்கா (HUDHA LANKA) நிறுவனத்தின்  பணிப்பாளர் சிஹார் ஆசிரியர் கலந்து சிறப்பித்தார்.


பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள்  ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.


இதேவேளை இதனை பெற்றுத்தந்த ஹுதா நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், இதனை வழங்கிய ஹேமந்த அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.





















No comments

note