Breaking News

புத்தளத்தில் கராத்தே தற்காப்புக் கலையைப் பயிலும் குழுவினருக்கு 9th Kyu - Yellow Belt (மஞ்சள் பட்டி) தரமுயர்த்தல் நிகழ்வு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளத்தில் தலைமையகம் அமைந்துள்ள Washi Shotokan Karate Association (WSKA) வில் கராத்தே தற்காப்புக் கலையைப் பயிலும் புத்தளத்தைச் சேர்ந்த வளர்ந்தவர்கள்; வாலிபர் குழுவின் 9th Kyu - Yellow Belt (மஞ்சள் பட்டி) தரமுயர்த்தல் நிகழ்வு அண்மையில் (09) புத்தளம் முஸ்லிம் கலாசார நிலையத்தில் நடைபெற்றது.


WSKA தலைவரும், பிரதம போதனாசிரியருமான ஷிஹான் எம். பெரோஸ்  (Black Belt 7th Dan) அவர்களினால் கராத்தே பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.


கடந்த ஐனவரி 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இக்கராத்தே வகுப்பில் *10th Kyu - White Belt (வெள்ளைப் பட்டி) தரத்தில் இணைந்த புத்தளத்தைச் சேர்ந்த பல்துறை சார்ந்த வளர்ந்தவர், வாலிபர்கள் தொடராக பயின்று (9th Kyu - Yellow Belt) மஞ்சள் பட்டிக்கு தரமுயர்த்தல் பெற்றனர். 


பொதுவாக, கராத்தே போன்ற தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக்களைப் பயில்வதற்கு ஆர்வத்துடன் முன்வருவோர் வளர் இளம் பருவ வாலிபராவர். 


எனினும் குடும்பம், தொழில்துறை, சமூகப் பொறுப்புக்கள் என இன்னோரன்ன வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும் வளர்ந்தவர்களும், வாலிபர்களும் கராத்தே பயில்வதற்காக முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க முன்மாதிரியாகும்.


குறைந்த பிரபலமுள்ள விளையாட்டான (Under Popular Sport) கராத்தேயை பயில்வதன் ஊடாக தேசிய மட்ட வெற்றிகளை சுவிகரிக்க முடியும் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. 


9th Kyu - Yellow Belt (மஞ்சள் பட்டி) தரமுயர்த்தல் பெற்ற பயிலுனர்கள்:


ஹிசாம் ஹுசைன், எம்.என்.எம்.நப்லான், எம்.என்.எம்.நாஸிக், எம்.டீ.ரினாஸ் முஹம்மது, எம்.டீ.எம்.சபீக், முஹம்மது சர்ராஜ் லாபிர், எஸ்.எச்.எம்.ஹம்தி ஆகியோர் ஆவர்.


வளர்ந்தவர், வாலிபர்களுக்கான கராத்தே வகுப்புக்கள் சனிக்கிழமைகளில் இரவு 8.00 - 10.00 வரை புத்தளம் முஸ்லிம் கலாசார நிலையத்தில் தொடராக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.












No comments

note