அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு மட்டக்களப்பிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சமகால விவகாரங்கள், அபிவிருத்தி, சமூக,u கல்வி, கலாசார மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து துணைத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, அவற்றுக்கான தீர்வு முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இவ்வாறான விடயங்களில் இந்தியாவினது வகிபாகம் தொடர்பில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கருத்துகள் பரிமாறிக் கொள்ப்பட்டதாகவும் இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
No comments