Breaking News

புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சனூன் விருது வழங்கி கௌரவிப்பு!.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகம் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் தொடராக நடாத்தி வரும் புத்தளத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான மாட்டு வண்டி போட்டியில் கடந்த 04 வருடங்களாக அறிவிப்பாளராக கடமையாற்றியமைக்காக புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.யூ.எம் சனூன் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார்.


இந் நிகழ்வின் அதிதிகளாக புத்தளம் நகர சபையின் முன்னால் தலைவர் எம்.எஸ்.எம் றபீக் முன்னால் புத்தளம் நகர சபை உறுப்பினர் களான றனீஸ் பதியுதீன் , பர்வின் ராஜா , ரெக்லா விளையாட்டு கழகத்தின் தலைவர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி விருதினை வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.






No comments

note