Breaking News

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு : பேராசிரியர் பாஸில் கலந்து கொண்டார்.

நூருல் ஹுதா உமர்

மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022/2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் வெகு விமர்சையாக அமைப்பின் தலைவர் ஏ.பைஹான் அஹமட்  தலைமை இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான கலீல் முஸ்தபா, டாக்டர் சஸ்லி ஹமீட், பரக்கத் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ.ஏ. பரீட் மற்றும் மருதமுனை இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், இளங்கலைப் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வில் அதிதிகளினால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.











No comments

note