Breaking News

பள்ளிவாசல்களை பாதுகாக்க பாதுகாப்புச் சங்கம் அமைப்பு

நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு என வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை சூறையாடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அண்மைக்காலமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.


எனவே இவற்றை பாதுகாப்பதற்காக கடந்த 21 ஆம் திகதி வக்பு பாதுகாப்புச் சங்கம் தெஹிவலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  இதன் பிரகாரம் பின்வரும் பள்ளிவாசல் சொத்துக்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளமோசடி வக்பு சொத்துக்கள்


தெஹிவளையில் பள்ளிவாசலுக்கருகில் தொடர்மாடி வீடுகட்டுவதற்காக ஒரு துண்டுக் காணியை விற்பதற்காக எடுக்கும் நடவடிக்கைத் தடுத்தல்.


திக்குவல்லையில் ஒரு பள்ளிவாசலில் கடந்த 25 வருடமாக  1000 ரூபாவுக்கு பாலர் பாடசாலை ஒன்றுக்கு வாடகைக்கு வழங்கி வருதல், மற்றும் பள்ளிவாசலுக்குரிய 25 ஏக்கர் காணியை வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்தல்.


கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை மஹல்லா வாசிகள் ஜனநாயக முறைப்படி பொதுக்கூட்டத்தில் ஒரு சபையை தேர்ந்தெடுக்காமல் வக்பு சபை திடீரென 9 பேர் கொண்ட புதிய நிர்வாக சபை நியமித்துள்ள விவகாரம்.


மகரகம கபூரியாவுக்குரிய காணியை மர்ஹூம் MDH அப்துல் கபூர் அவர்கள் வக்பு செய்த பின்பு 70 வருடங்களில் பின் 5 பரம்பரையினர் அச்சொத்துக்களை விற்று வருகின்றமை.


ராஜகிரிய, கல்லெலிய, மாகொல போன்ற முஸ்லிம்களின் சொத்துக்கள் பல வக்பு செய்யப்பட்ட பின்னர் கம்பனி முகாமைத்துவ சபை என்றும் குடும்ப உறவினர் என்றும் சொந்தம் கொண்டாடி அக்காணிகளை சொத்துக்களை விற்பதற்கு அல்லது வேறு மோசடி முயற்சிகளுக்கு உட்படுத்தல்.


இலங்கையில் முஸ்லிம்களுக்கு என வக்பு செய்யப்பட்ட  சொத்துக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் பங்கு கொண்டுள்ள தொண்டர் அடிப்படையில் பணியாற்ற விரும்பும் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் சட்டத்தரணிகள் மௌலவிகள் பலரும் இவ்வமைப்பில் அங்கம் வைக்கின்றனர்.


எனவே இச்சொத்துக்கள் சூறையாடப்படுவதை தடுப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டும் எனவும் அத்துடன் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும் எனவும் இவ்வமைப்பு இங்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.




No comments

note