அல் அக்ஸா பாடசாலையில் உரிய காலத்தில் கூட்டங்களை நடாத்த தவறிய அதிபர் - வடமேல் மாகாண பணிப்பாளருக்கு மகஜர்
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ் )
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தற்போதைய தற்காலிக அதிபர் அன்சார் முஸ்தபா பாடசாலையின் அபிவிருத்தியை மையமாக கொண்டு செயற்படக் கூடிய பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றை உரிய காலத்தில் தெரிவு செய்யாமலும் அவைகள் வலுவிழந்த நிலையில் அதனை வலுப்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் செயற்படுவதாகவும் பெற்றோர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிப்பதாவது : மேற்படி தேசிய பாடசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக பழைய மாணவர் சங்கம் தெரிவு செய்யப்படமால் உள்ளது எனவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா செய்தும் அந்த இடைவெளி நிரப்பப்படாமல் உள்ளமை மற்றும் 2024 ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கை அனுமதிக்கான பொதுக் கூட்டம் கூட்டப்படாமை தொடர்பான முறைப்பாடுகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments