Breaking News

கல்முனை ரோயல் வித்தியாலயத்திற்க்கு மர்யம் மன்சூர் நளிமுதீனால் போட்டோ கொப்பி இயந்திரம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு ...!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சுனாமியினால் பாதிக்கப்பட்ட கல்முனை கீறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கமு/கமு/ ரோயல் வித்தியாலயத்தின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலையின் அதிபர்  எம்.எச்.எம்.அன்சார் அவர்களினால் பாடசாலை தேவைப் பாடுகள் குறித்து ஏ.ஆர் மன்சூர் பௌன்டேஷனுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய,முன்னாள் வர்தக வாணிப துறை அமைச்சரும்,குவைத் நாட்டுக்கான முன்னாள் தூதுவருமான மர்ஹூம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வியும்,ஏ.ஆர் மன்சூர் பௌன்டேஷன் மற்றும் அவுஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள் கவுன்சிலின் தலைவியும்  சட்டதரணியுமான  மர்யம் மன்சூர்  நளிமுதீன் அவர்களினால் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேஷன் அமைப்பின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களிள் ஒன்றான “Back to School” திட்டத்தின் கீழ் இவ்வாண்டிற்க்கான(2024)ஆரம்ப நிகழ்வு கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது  பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன நேற்று (15) வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் பாடசாலை சமூகம் சார்பில் பாடசாலையின் அதிபர்  எம்.எச்.எம்.அன்சார் அவர்களினால் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்கு விசேட துஆப்பிராத்தனையும் இடம்பெற்றது அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.


பாடசாலையின் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,மாணவர்கள் மற்றும் பெளன்டேசனின் உறுப்பினர்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.


அம்பாரை மாவட்டத்தில் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேஷன் அமைப்பானது குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் பொது மக்கள் நலன் சார் உதவிகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










No comments

note