Breaking News

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் வித்தியாரம்ப விழா!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட  பு/கனமூலை முஸ்லிம் மகா  வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று (22) பாடாசாலையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  முன்னாள் கற்பிட்டி  பிரதேச சபை உறுப்பினர்  கே.எம்.எம். பைஸர் மரிக்கார், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா, கனமூலை பெரிய பள்ளித் தலைவர் அஷ்ஷெய்க்  எம்.எச்.எம்.நஜீம் (ஷர்கி), தொழிலதிபர் ஏ.ஏ.அஸ்ரின் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்தனர்.


இதன்போது தரம் இரண்டு மாணவர்கள் தரம் ஒன்று புதிய மாணவர்களை கிரீடம் அணிவித்து மலர் தூவி பாடசாலைக்கு வரவேற்றனர்.


குறித்த நிகழ்வில்  HUDHA Lanka நிறுவனத்தின் மூலம் 5000 ரூபா பெறுமதியான  பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பாடசாலை பொதிகள் 50  மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 













No comments

note