தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி
விபத்தில் மரணமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இவ்விடயத்தை பொதுஜன பெரமுன கட்சியின் செயற் குழுவுக்கு சமர்ப்பிக்க ஆவணங்களை தயார் படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.
தற்போது தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்களில் ஒருவர் இதற்கான வாய்ப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் இவ்விடயத்துக்கு கட்சி செயற்குழு பெரும்பாலும் அனுமதி வழங்கும் எனவும் கூறப்படுகிறது.
No comments