Breaking News

புத்தளம் மாணவர்கள் கராத்தே போட்டியில் பங்குபற்றி மூன்று தங்கப்பதக்கம், நான்கு வெள்ளிப்பதக்கம், ஏழு வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை!.

 (எம்.யூ.எம்.சனூன்)

நிப்போன் கென்சன் - கை கராத்தே டூ சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்ற புத்தளம் மாணவர்கள் மூன்று தங்கப்பதக்கங்கள், நான்கு வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்துள்ளனர்.


இந்த போட்டி தொடர் வவுனியா ஈரப்பெரியகுளம் உள்ளக விளையாட்டு அரங்கில் ஞாயிறன்று (18) இடம்பெற்றது.


பதக்கங்களை அள்ளிக் குவித்த மாணவர்களுக்கு WSKA கழகத்தின் பிரதான போதனாசிரியர் எம். பைரோஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.






No comments

note