Breaking News

புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு!.

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை காலை (11) நடைபெற்றது. 


பாத்திமா அஹதிய்யா பாடசாலைக்கு 300 மாணவர்கள்  மும்மொழிகளிலும் முதற் கட்டமாக அனுமதிக்கப் பட்டனர்.

 

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் எம்.ரீ.மபாஹிரா மற்றும் அஹதிய்யா பாடசாலை முகாமைத்துவக் குழுவினர், சிறந்த கல்வியியலாளர்களைக் கொண்ட முஅல்லிமாக்கள் ஆகியோரின் அயராத முயற்சியின் விளைவாகவும் பெற்றோரது முழுமையான பங்களிப்புடனும் ஆரம்பமான பாத்திமா அஹதிய்யாவில் அழகான சீருடையுடன் மாணவர்களின் வருகையும் அமைந்திருந்தது .


காலைக் கூட்டத்தில் விஷேட வளவாளர்களின்  சொற்பொழிவுகள் மற்றும் உடற்பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர் ஆசிரியர் குழாம் இனிப்புப் பண்டங்களை வழங்கி மாணவர்களை வரவேற்றமை  விஷேட அம்சமாகும்.  


தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கல்வி பயில மாணவர்கள்  அனுமதிக்கப் பட்டனர். 


இந்நிகழ்வில் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் தலைவி ஸரீனா பர்வீன், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவர் பாரூக் பதீன், புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொருளாளர் ஏ.ரீ.தாஹிரா தஸ்னீம், அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










No comments

note