இலங்கையின் 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது
(சர்ஜுன் லாபீர்,ஐ.எல்.எம் நாஸிம்)
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(4) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வுக்கு உதவி பிரதேச செயலக செயலாளர் யூ.எம் அஸ்லம்,கணக்காளர் ஐ.எம் பாரிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம் சலீம்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எல்.எம் தாஸீம்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா, எப்.சஹீனா உம்மா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments