Breaking News

கற்பிட்டி "கயிடெக்ஸ் 17 "அமைப்பின் இலவச கருத்தரங்கு தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான கணிதபாட  இலவச ஐந்து நாள் தொடர் கருத்தரங்குகள் தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் தலைமையில் நடைபெற்றது.


இக் கலந்துரையாடலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 2017 ம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதி தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் "கயிடெக்ஸ் 17" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.


"கயிடெக்ஸ் 17" அமைப்பின் தலைவர் ஏ.எச் முசாரப் உரையாற்றும்போது தெரிவித்ததாவது: கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் இறுதி பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் கணிதபாட சித்தி வீதம் குறைவடைந்துள்ளதனை கருத்தில் கொண்டு நாம் கல்வி கற்ற பாடசாலைக்கு எமது கயிடெக்ஸ் 17 அமைப்பின் ஊடாக முதன் முறையாக இலவச கருத்தரங்குகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்தாக தெரிவித்தார்.






No comments

note