நாவக்காடு தமிழ் வித்தியாலயத்தில்ஸசாதனை மாணவர்கள் கௌரவிப்பு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
கற்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு க. பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் பீ.ஜெனட்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேத்தாப்பலை பங்கின் அருட் சகோதரர் பிரசங்க, புத்தளம் வலய ஆசிரிய ஆலோசகர்களும், கற்பிட்டி கோட்ட ஆசிரிய ஆலோசகர்களும், ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து மாணவர்களை கௌரவித்தனர்.
மாணவர்களால் பாடசாலைக்கு பெற்றுத்தரப்பட்ட வெற்றியானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும். இதுவரை காலமும் பாடசாலையில் அனைத்து மாணவர்களும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருக்கவில்லை. இம்முறை ஒரே தடவையில் பரீட்சை எழுதி 09 பாடங்களிலும் சித்தி பெற்று 100% வெற்றியை பெற்றுத் தந்தமை வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
No comments