வாகன இறக்குமதி தீர்மானத்துக்கு இதுவரை அரசாங்கம் வரவில்லை - இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தகவல்
தற்போது தடைக்கு உள்ளாகியுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் றஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு இருப்பது உண்மை ஆனால் இது வாகன இறக்குமதியை அனுமதிக்கும் தீர்மானம் ஆகாது நாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை உட்பட நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை உட்பட பல காரணிகள் வாகன இறக்குமதி தொடர்பில் தொடர்பு படுவதால் இவை அனைத்தையும் ஆராய்ந்து கமிட்டி மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு இணங்கவே செயற்பாடுகள் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments