Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு செரீனா ஸ்ட்டோர்ஸ் நிறுவனத்தினால் புத்தகப் பை அன்பளிப்பு!.

 கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு கொழும்பு  செரீனா ஸ்ட்டோர்ஸ் (CERINA STORES) நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட புத்தகப் பை வழங்கும் நிகழ்வு நேற்று (19) கல்லூரியின் CLC மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எம்.எச்.எம். அலிஅக்பர், மற்றும் எம்.நௌபி ஆகியோரின் முயற்சியினால் கொழும்பு செரீனா ஸ்ட்டோர்ஸ் நிறுவனத்தின் ஊடாக  சுமார் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் 220,000/= ரூபா பெறுமதியான  75  புத்தகப் பைகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப், ஆசிரியர்கள், ஏற்பாட்டாளர்களான எம்.எச்.எம். அலிஅக்பர், எம். நௌபி, மஸ்ஜித் குபா தைக்காவின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் முர்ஸித் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இப்புத்தகப் பை வருமைக் கோட்டின் கீழ் வாழும் தரம் 6, தரம் 7 மாணவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


KMCC (NS) MEDIA UNIT

















No comments

note