Breaking News

பொலிஸாரின் கண்ணீர்ப் புகையினால் பாதிக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ளதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற SJB ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததன் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.




No comments

note