Breaking News

களனி பல்கலையில் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி பெளத்த பாளி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்

களனிப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி கற்கை நெறியின் கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி இன்று திறந்து வைத்து உரையாற்றினார்.


ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொள்வதை தடுக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் பல்வேறு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன் நேற்று இரவு இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிட தொகுதிக்குள் எவரையும் பிரவேசிக்க விடாது தடைகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகளை அடுத்து ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் அங்கு விசேட உரையும் நிகழ்த்தினார்.




No comments

note