Breaking News

வேறு கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு!.

 "புதியதொரு கூட்டணி சம்பந்தமாக சில கருத்துக்கள் அடிபடுகின்றன. அதில் சேர நாங்களும் தயாராக இருக்கின்றோமா என்ற ரீதியில் கேள்விகளைக் கேட்கின்றார்கள். எங்களைப் பொறுத்த வரையில், சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி  கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். அதைத் தவிர, வேறு எந்த கூட்டணியிலும் இணைவதற்கு இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை" என்றார். மு.கா.தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.


 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சம்பந்தமாக இரண்டாவது நாளாகவும் திங்கட்கிழமை (29) உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதிலாகவே அவர் இதனைக் கூறினார்.




No comments

note