நாயின் மீது காவி உடையை போர்த்தி டிக்டொக் பதிவிட்ட விஸ்வ புத்தி தேரர் பிணையில் விடுதலை
நாயை காவி உடையால் போர்த்தி Tik Tok பதிவிட்ட இரத்தினபுரி விமல புத்த அல்லது விஸ்வ புத்த ஹிமி என அழைக்கப்படும் விஸ்வ புத்த தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் விடுதலை செய்ததுள்ளது.
ஏற்கனவே இக்குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட விஸ்வ புத்த தேரர் அண்மையில் சமூக வலைத்தளம் ஒன்றில் வழங்கிய கலந்துரையாடலின் போதும் வேறு நடவடிக்கைகளின் போதும் மீண்டும் பெளத்த மதத்தை நிந்திக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு குற்றஞ்சாட்டி மீண்டும் நீதிமன்றத்தில் இவர் தொடர்பில் குற்றப் பத்திரிக்கை சமர்ப்பித்த போது நீதவான் இவரை மீண்டும் எச்சரித்து விடுதலை செய்தது.
இரண்டு பாரதூர குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு எதிராக பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதை மறந்து விட வேண்டாம் என நீதவான் இவருக்கு எதிரான தீர்ப்பினை வழங்கும்போது எச்சரித்துள்ளமை அவதானிக்க தக்கது.
No comments