ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!.
ஜனாதிபதி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் திரு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும். அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்த பத்து பில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments