Breaking News

தேசிய மட்ட கராத்தே போட்டியில் புத்தளம் இரு மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

(கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தின் 22 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளம் மாணவர்கள் இருவர் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.


இந்த தேசிய மட்ட போட்டிகள் கொழும்பு சுகதாஸ உள்ளக        விளையாட்டரங்கில்  நடைபெற்றது. 


மேற்படி தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் வசீ ஷொடோக்கன் கராத்தே டூ (WASHI SHOTOKAN KARATE DO ) சங்கத்தின் புத்தளம் கிளையின் மாணவர்களாகிய ஏ.எம்.அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவிலும்  குமித்தே  போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். 


இம் மாணவர்களுக்கான பயிற்சிகளைபுத்தளம் டபிள்யூ .எஸ்.கே.ஏ (WSKA ) கராத்தே சங்கத்தின்            பிரதான போதனாசிரியரும்,  பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பெரோஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

note