கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் தலைமையிலான முகாமைத்துவக் குழு அலிசப்ரி எம்.பியுடன் சினேகபூர்வ கலந்துரையாடல்.
கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையிலான முகாமைத்துவக் குழு (28) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களை அவருடைய காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் சம்பந்தமான விடயங்களை எம்.பியிடம் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலையின் ஆரம்பப்பிரிவு பகுதியில் காணப்படும் பிரதான நுழைவாயிலுக்கு முகப்பு அமைக்க 18 இலட்சம் ரூபாவும், பாடசாலையின் உள்ளக வீதியமைக்க 5 இலட்சம் ரூபாவும், 50% வீதமான மாணவர்களுக்கு புத்தகப்பை (BAG) வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
இதேவேளை பாடசாலையில் குறைபாடாக காணப்படும் கேட்போர் கூடத்தை தன்னாலான முயற்சியில் தனது காலத்தில் 600 இருக்கைகளைக் கொண்ட 5 கோடி பெறுமதியான கேட்போர் கூடத்தை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதியளித்ததாகவும், இச்சந்திப்பு தமக்கு நம்பிக்கையூட்டுவதாக அதிபர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக், பிரதி அதிபர் ஏ.ஏ.அஷ்ரப், உப அதிபர், என்.எம்.எம். ரஹ்மான், ஆசிரியர்களான ஜே.முபீன், ஏ.எச். பௌசுல், ஏ.ஆர்.எம்.ரஸீல், எச்.சுஹைப்கான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
KMCC (NS) MEDIA UNIT
No comments