கற்பிட்டி பிரதேச சபையின் புத்தாண்டு நிகழ்வுகள்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச சபையின் புத்தாண்டு நிகழ்வும் முதல் நாள் பணி ஆரம்பத்திற்கான சத்தியபிரமாண வைபவமும் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
மூன்று மதத் தலைவர்களினாலும் தேசியக் கொடி மாகாண கொடி மற்றும் பிரதேச சபைக் கொடிகளும் அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றியும் ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு நிகழ்வில் பிரதேச சபையின் செயலாளரினால் இவ்வாண்டுக்கான சத்தியப்பிரமாணமும் இடம்பெற்று முதல் நாள் பணிகள் ஆரம்பிக்கபட்டது.
No comments