சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் புத்தளம் மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் - அல் ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) முதலாமிடம்.
சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் புத்தளம் மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் - அல் ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தனத ஆரம்பக் கல்வியை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 வரை கல்வி கற்று பின்னர் பாணந்துரை தீனியா அரபுக் கல்லூரியில் அல்ஹாபிழ் மற்றும் அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
இவர் தனது அல்குர்ஆன் மேற்படிப்புக்காக பாக்கிஸ்தான் ஜாமியா பின்னூரியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவர் அங்கு இடம்பெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப்போட்டியில் (10 ஜுசுக்கள்) கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அஷ்ஷெய்க் - அல் ஹாபிழ் நஸ்ருதீன் (தீனி) அவர்களை மதுரங்குளி மீடியா சார்பில் வாழ்த்துகின்றோம்.
No comments