Breaking News

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சந்தித்த தேசிய ரீதியில் செம்பியனான புத்தளம் கரப்பந்தாட்ட அணி

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கரப்பந்தாட்ட அணி அண்மையில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் அகில இலங்கை ரீதியிலான போட்டியில்  சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.


35 வது  வருடங்களாக இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இணைந்து நடாத்தப்படுகின்ற தேசிய கரப்பந்தாட்ட சாம்பியன் சுற்றுப் போட்டியில் தொடர்ச்சியாக 33 வருடங்களாக கம்பஹா மாவட்ட கரப்பந்தாட்ட அணி வெற்றிகளை பெற்றிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை புத்தளம் மாவட்ட அணி தெரிவு செய்யப்பட்டபோதிலும் 2022 ம் ஆண்டு இறுதிப் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இருப்பினும் இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் முன்னால் செம்பியன் கம்பஹா மாவட்ட அணியை வீழ்த்தி புத்தளம் மாவட்ட அணி சம்பியன் ஆனது.


புத்தளம் மாவட்ட கரப்பந்தாட்ட அணியில் சமீரகமயைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பள்ளிவாசல்துறையைச் சேர்ந்த மூவர் புழுதிவயல் சேர்ந்த இருவர் கடையாமட்டையைச் சேர்ந்த ஒருவர் என  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுடன் மாதம்பை மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவரும் புத்தளம் மாவட்ட அணியில் இடம்பெற்றிருந்ததுடன்  அணித் தலைவராக சமீரகம பிரதேசத்தை சேர்ந்த ரிஃப்கான் தெரிவு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.


 இந்த அணியில் பங்கு பற்றிய வீரர்கள் புத்தளம் நகர சபை காரியாலயத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சந்தித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்  சிறந்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் அடுத்த மாதம் பாராளுமன்றத்திற்கு அனைத்து வீரர்களையும் அழைத்து விளையாட்டு அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




No comments

note