Breaking News

புத்தளம் நகரத்திற்கான, புதிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் நியமனம்!

புத்தளம் நகரத்திற்கான, புதிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளராக சமாதான நீதவான் பேர்னாட் மேரி இந்துமதி அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.


புத்தளம் நகர பிறப்பு மற்றும்  இறப்புப் பதிவாளரான  காலம் சென்ற  தேசமான்ய S.L.M அலி அவர்களுக்குப் பின்னர், தற்காலிகமாக பாலாவியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் நியமனமாகி இருந்தார். 


அதற்குப் பின்னர், நிரந்தர பதிவாளராக புத்தளத்தைச் சேர்ந்த, Bernard Mary Indumathi (Bபேர்னாட் மேரி இந்துமதி) அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.


இவர், புத்தளம், மன்னார் வீதி. சோல்ட்டன், இரண்டாவது மைல் கல், ஒற்றைப்பனையடிக்கு அடுத்த சந்தியிலுள்ள வீட்டில் வசித்து வருகின்றார். 


இவர், ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவருமாவார்.  மேலும்! சமாதான நீதவான் மற்றும் திருமணப் பதிவாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.


பதிவாளரை திங்கள் முதல் வெள்ளி வரை புத்தளம், தள வைத்தியசாலை அலுவலகத்திலும், சனி, ஞாயிறு தினங்களில், தனது இல்லத்திலுள்ள அலுவலகத்திலும்  சந்திக்க முடியும் என்றும் தெரிவித்தார்.


பதிவாளர், அவர்களின் தொலைபேசி இலக்கம்:

077 677 7110







No comments

note