கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.!
(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையில் புது வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் நாட்டுக்காக உயிர்நீத்த முப்படை வீரர்களுக்கு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் அரச சேவை சத்தியப்பிரமாணத்தை வாசிக்க, உத்தியோகத்தர்கள் அனைவரும் அதனை கூட்டாக வழிமொழிந்து உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் அரச சேவையை வலுப்படுத்துவதற்கான அறிவுரைகளை முன்வைத்து விசேட உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கணக்காளர் கே.எம். றியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ. வட்டப்பொல, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நௌசாத், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், வி.சுகுமார், எம். நிசார், திருமதி எம்.வி.எம்.அபார், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், பொறியியல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. அப்துல் அஹத், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.பாஸித், நிதி உதவியாளர் திருமதி எஸ். யோகராஜா, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம். குணரட்னம், எம்.சலீம், எம்.எஸ்.எம். உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளின் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
No comments