புத்தளம் ஸாஹிறா பழைய மாணவர்களின் "வேர்களை மறவாத விழுதுகள்" கௌரவிப்பு நிகழ்வு
(கற்பிட்டி நிருபர்)
புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியில் 1993 சா/தா, 1996 உ/த கற்ற மாணவர்கள், தமது பாடசாலை வாழ்வில் நான்கு தசாப்தங்களைத் தாண்டிய பின்னரும், தமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து "வேர்களை மறவாத விழுதுகள்" என்ற தொனிப்பொருளில் கெளரவித்த நிகழ்வு ஒன்று புத்தளம் ஆர்.எஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியில் பெருந்தொகையினர் உயர்தரத்தில் கற்றதும், அவ்வாறே பல்கலைக்கழகம் சென்றதுமான அக்காலப் பகுதி மாணவர் தொகுதிகளில் இம்மாணவர் தொகுதியும் ஒன்று. இன்று இவ்வகுப்பு மாணவர்கள் பலர் சமூகத்தின் உயர் நிலையில் இருக்கின்றனர். இக்கல்லூரி உருவாக்கிய "முதலாவது" என்ற பெருமைக்குரியோரும் இவர்களுள் அடங்குவர். உடற்கூற்று வைத்திய நிபுணர், கல்வி நிருவாக சேவைப் பணிப்பாளர், பல் வைத்திய நிபுணர், யூனானி மருத்துவர், விஞ்ஞானப் பட்டதாரி அதிபர், என அவர்களுள் சிலரைப் சிலரைப் பட்டியலிடலாம். மேலும் இத்தொகுதி மாணவர்கள் ஒன்றிணைந்து தூரநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் செயப்படுவதனை நேற்றைய நிகழ்வில் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருந்தாக ஓய்வு பெற்ற முன்னால் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ சன்ஹீர் தெரிவித்துள்ளார்.
No comments