Breaking News

க.பொ.த. சாதாரண தர சாதனை மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு 2023

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய) த்திலிருந்து 2022ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை புரிந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில்  நடைபெற்றது.


இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி கௌரவித்தனர். இப்பாடசாலை வலய மட்ட பாடசாலை தரப்படுத்தலில் ஒட்டுமொத்த புள்ளி மதிப்பீட்டின்படி 20 வது இடத்தில் இருந்து 15 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதற்காக பாடுபட்ட பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதி தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர், பிரதி கல்வி பணிப்பாளர்கள், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் எம்.எஸ்.எம். பைசால் இதன்போது தெரிவித்தார்.






No comments

note