Breaking News

கற்பிட்டி ஆலங்குடாவில் குவேனியின் செம்பு குடம் தேடி புதையல் தோண்டிய 04 பேர் கைது.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி, ஆலங்குடாவில் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம் இக்பால் அவரின் 25 ஏக்கர் தோட்டத்தில் காவலாளி உட்பட நான்கு பேர் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இது பற்றி தோட்ட உரிமையாளர் நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நுரைச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எஸ் பிரேமசிறி தலைமையிலான பொலிஸ் குழு புதையல் தோண்டப்பட்டதாக கூறப்படும் தோட்டத்தை சுற்றிவளைத்ததுடன் சந்தேக நபர்கள் 04 பேரையும் கைது செய்துள்ளனர்.


குறித்த தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக காவலாளியாக கடமைபுரிந்து வரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தோட்டத்தில் குவேனி பாவித்ததாக கூறப்படும் செம்பு வகையைச் சேர்ந்த குடம் ஒன்று புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தேடியே புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களும் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.




No comments

note