ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் ரஸீல் அவர்களின் அன்புத் தந்தை அப்துல் ரவூப் காலமானார்.
யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ரவூப் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்றவர்களான சுல்தான் அப்துல் காதர் மற்றும் செய்னம்பு ஆகியோரின் அன்பு மகனும், ரஸீதா அவர்களின் அன்புக் கணவரும், கொழும்பு - மட்டக்குளி ஸேர் ராசிக் பரீட் பாடசாலை ஆசிரியரும், புத்தளம் Global High Education நிறுவனம் நடத்தி வருபவருமான ஆசிரியர் ரம்ஸீன், பொறியியலாளர் ரஸ்மி, கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் ரஸீல், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியை ரஜீஆ, Dr.ரஸானா, Dr.ரஸீனா ஆகியோரின் அன்புத் தந்தையும், முபஸ்ஸர், முஹைஸ், இர்ஷாத், நஸ்ரின், ரிழாயா, ஸபான், ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம் சென்ற ஸாஹிரா, ஹமீதா, ரவூபா, ஹலீம் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்
மகன் ரஸீல் ஆசிரியர்.
No comments