செடோ சிறிலங்கா நிறுவனத்தின் மனித வியாபாரம், மனித ஆட்கடத்தல் செயற்திட்டம்
(படமும் தகவலும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் )
கற்பிட்டி - குறிஞ்சிப்பிட்டியில் இயங்கி வரும் " செடோ சிறிலங்கா " நிறுவனம் யூ.எஸ் எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக சேப் பவுண்டேஷனின் வழிகாட்டலின் கீழ் " மனித வியாபாரம் மற்றும் மனித ஆட்கடத்தல் " தொடர்பான மக்களுக்கு அறிவூட்டும் ஐந்து வருட செயற்திட்டத்தை கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆனைவாசல், குறிஞ்சிப்பிட்டி வடக்கு, குறிஞ்சிப்பிட்டி தெற்கு, கண்டக்குளி, பள்ளிவாசல்துறை ஆகிய ஐந்து கிராம சேவையார் பிரிவுகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக செயற்படுத்தி வருகின்றனர்.
மேற்படி செயற்திட்டத்தின் இரண்டு வருட நிறைவின் முன்னேற்ற செயல்பாடு மற்றும் பிரச்சினைகள் கள விஜயத்தின் போது எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடும் முகமாக நிறுவனங்களின் அபிவிருத்தி இணைப்பாளர் திரு அர்ஷத் மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் செடோ சிறிலங்கா நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.
அவர்களுடன் செடோ சிறிலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ் , பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிறுவன கள உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.
No comments