Breaking News

கற்பிட்டியின் கல்வி வளர்ச்சியை மையமாகக் கொண்டு "கல்வி அபிவிருத்தி ஒன்றியம்" உருவாக்கம்

(கற்பிட்டி - எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி நகரம் கல்வியில்  பல சாதனைகளை நிலைநாட்டிய வரலாறுகள் உண்டு. ஆரம்ப காலத்தில் கற்பிட்டி நகர பாடசாலையில் வெளி ஊர் மாணவர்கள் பாடசாலை விடுதிகளிலும் உறவீனர்களின் வீடுகளிலும் தங்கி கல்வி கற்று சிறந்த அடைவு மட்டங்களை ஈட்டிய வரலாற்று சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன.


இவ்வாறு காணப்பட்ட கற்பிட்டியின் கல்விப் பாதை கற்பிட்டி பாடசாலையில் கடமையாற்றிய ஒரு சில கல்வி அதிகாரிகளின் சுயநலப்போக்கின் காரணமாக கடந்த ஒரு தசாப்த காலமாக வீழ்ச்சி பாதையை நோக்கிய நகர்வுடன் கற்பிட்டி மாணவர்கள் வெளி ஊர் மற்றும் வெளி மாவட்ட பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்கும் நிலை இன்று தோன்றி உள்ளது.


இந்நிலையை மாற்றி அமைத்து கற்பிட்டியின் கல்வி அபிவிருத்தியை உருவாக்கும் எண்ணக்கருவின் அடிப்படையில் கற்பிட்டி கல்வி அபிவிருத்தி ஒன்றியம் உருவிக்கப்பட்டுள்ளது. 


இதில் கற்பிட்டியில் துறைசார்ந்த கல்வியலாளர்கள் ,அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் , உலமாக்கள் , மஸ்ஜிதுகளின் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள் , சங்கங்களின் தலைவர்கள் என சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக கற்பிட்டி கல்வி அபிவிருத்தி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.


இவ் ஒன்றியம் கற்பிட்டியின் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான நேரத்தில் பொருத்தமான சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதுடன் பாடசாலை நிர்வாகத்தோடு இணைந்து மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பாடசாலையில் ஆசியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் சவால்களை பாடசாலை நிர்வாகத்தோடும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தோடும் இணைந்து பாடசாயினுடைய கல்வி முன்னேற்றத்திற்காக பாடசாலைக்கு வெளியில் ஊர் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மேற்படி ஒன்றியம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன் ஒன்றியத்திற்கான செயற்க் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. 


தலைவராக  ஓய்வு பெற்ற புத்தளம் வளையக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.எம் பைறுஸமான், 

பிரதித் தலைவராக அதிபர் எம்.ஐ.எம் றஸ்ஸாக், 

செயலாளராக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.என்.எம்.எம் பஹ்ரி, 

இணைச் செயலாளராக பட்டதாரி எஸ்.எம் அஸ்லம், 

பொருளாளராக முன்னால் போரூட் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் டி.எல்.எம் மகீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.







No comments

note