Breaking News

கோலாகலமாக இடம்பெற்ற கடையாமோட்டை தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு!.

புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஆசிரியர் தின நிகழ்வு  இன்று  (01)  பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களின்  தலைமையில் பாடசாலையின் TPS மண்டபத்தில்  கோலாகலமாக இடம்பெற்றது.


பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன் உட்பட உறுப்பினர்கள், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு  உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.ஏ.ஜெஸீர் உட்பட உறுப்பினர்கள்  இணைந்து மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின்  பணிப்பாளர் ஏ.எச்.எம்.அருஜுன அவர்௧ளும் சிறப்பு அதிதியாக புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர அவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் போது புத்தளம் வலயக்  கல்விப் பணிப்பாளரை பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர் உட்பட முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன், பழை மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததோடு, புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.


இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய புத்தளம் வலயக் கல்விப் பணி மனையின்  பணிப்பாளர் தான் புத்தளம் வலய கல்விப் பணி மனையை பாரமெடுத்து புத்தளம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில்  முதலாவது  கலந்து கொள்ளும் பாடசாலை நிகழ்வு இன்றைய  ஆசிரியர் தின இந்நிகழ்வாகும் எனக் கூறியதோடு, தான் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக பல நாட்கள் பிற்போடப்பட்டு இன்று இடம்பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் எனக்கூறி இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கல்வி அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.


இதன்போது ஆசிரியர்களின் கலை , கலாச்சார நிகழ்ச்சிகளும் அரகேற்றப்பட்டன.  இதில் மாணவர்கள்  மகிழ்ச்சியடையும் வகையில் சகல ஆசிரியர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் "FAIZA TRANSPORT" உரிமையாளர் ஏ.எச்.எம். ஹாரூன் அவர்கள்  ஏற்பாடு செய்திருந்த நினைவுப் பரிசில்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 


இதேவேளை பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான ஒரே நிறத்திலான  ஆடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இப்பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு அதிபர், ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.


KMCC (NS) MEDIA UNIT





















































No comments

note