ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 75வது ஊடகச் செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் பாடசாலைகளுக்கான ஊடக செயலமர்வின் 75வது ஊடகச் செயலமர்வு சனிக்கிழமை ( 25.11.2023) கொழும்பு 12 , பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் முழு நாள் கருத்தரங்காக நடைபெற்றது .
'21ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியவியல் மற்றும் சமூக ஊடகங்கள்' எனும் தலைப்பில் . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், மற்றும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் அதிபர் எம்.எச். மும்தாஜ் பேகம் ஆகியேர்கள் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரபல ஊடக நிறுவனங்களின் முகாமையாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என துறை சார்ந்த விரிவுரையாளர்கள் பல தலைப்புகளில் விரிவுரைகளையும் , பயிற்சிகளையும் வழங்கினார்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம், பத்திரிகை செய்தி அறிக்கையிடல் தொடர்பாகவும் , சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ. ஆர்.வி லோசன் , வானொலியில் செய்தி அறிக்கையிடுதல் மற்றும் செய்தி வாசிப்பு பற்றியும், சத்தி தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் ஜிப்ரி ஜெபதர்சன் தொலைக்காட்சி செய்தியறிக்கையிடுதல் மற்றும் குரல் பயிற்சிகள் போன்றவற்றையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளரும் , சி . ஐ . ஆர் பணிப்பாளருமான சிஹார் அனீஸ், AI ( செயற்கை நுண்ணறிவு ) தொடர்பாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயரிப்பாளரும், ஊடக பயிற்று விப்பாளருமான இஸ்பாஹான் சராப்டீன், சமுக சேவை ஊடக வலைத்தளங்களில் கைத்தொலைபேசி ஊடாக செய்தி தயாரித்தல் போன்ற தலைப்புகளில் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயரஸ்தானிகராலயத்தின் ஊடக மற்றும் கல்வி கலாசார நடவடிக்கைகளுக்கான இணைப்பாளராக புதிதாக நியமனம் பெற்ற அதில் சத்தார் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார் .
கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், கல்லூரி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
ஊடக செயலமர்வினை கல்லுாரியின் அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கல்லூரியின் மாணவத் தலைவிகள், மற்றும் சிரேஸ்ட மாணவிகள் என 160 மாணவிகள் கலந்து கொண்திருந்தன.
No comments