இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்...!!
நூருல் ஹுதா உமர்
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று 2023.11.11 அம்பாறை 24 வது படைப் பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது
இதன்போது இலங்கை ராணுவத்தின் ஊடக ஆலோசகர் சிசிர விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் இன்று சில ஊடகவியலாளர்கள் அரசியலுக்கு விலை போய் உள்ளனர் என்றார்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறிப்பாக அண்மைக்காலமாக பல்லூடகம் - டிஜிட்டல் மீடியாக்கள் தான் சார்ந்த அரசியலை நியாயப்படுத்தும் நிலைக்கு விலை போய்விட்டது. இது நடுநிலையான ஊடகவியலுக்கு பொருத்தம் அற்றதாகும். அரசியல் சார்ந்த ஊடகவியல் என்பது மிகப்பெரும் ஆபத்தானதாகும். இன்று சர்வதேச ரீதியிலான ஊடக அறிக்கையிடலில் குறிப்பாக இஸ்ரவேல் - பலஸ்தீன மோதல் குறித்த செய்திகள் வெளி வருகின்ற போதும் அதிகமான உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட நிலையில் அவை வெளிவந்து கொண்டிருக்கின்றன
இவர்கள் உண்மையை வெளியிடாது திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றனர். ஆனால் ஊடகவியலாளர்கள் நிலைமை அறிந்து செயல்படுகின்றவர்களாக, பொறுப்பு மிக்கவராக கஷ்டத்தில் உள்ள மக்களை மேலும் கஷ்ட நிலமைக்குள் தள்ளிவிடாது அவர்களை ஆற்றுப்படுத்துகின்ற, அவர்களது கஷ்ட நிலைமைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கின்றவர்களாக தனது பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்
குறிப்பாக ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை கடைப்பிடித்து செயல்படுகின்ற பொறுப்பு மிக்கவர்களாக இருத்தல் அவசியமானதாகும். ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் வெளியிடுகின்ற செய்தி குறித்து அந்த செய்தியின் சட்ட ரீதியான தன்மைக்குள் உள்வாங்கப்படுகின்றீர்கள். அது உங்களுக்கு சில வேளைகளில் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.
அது பிரசுரமானதும் உங்களுடைய சொந்த செய்தியாகவும் மாறிவிடுகின்றது. செய்திகளை பரிமாறும் போது பொறப்பு கூறலுடன் செயல்பட வேண்டும். குறித்த செய்திக்கான மூலங்களை கண்டறிந்து வெளியிடல் அவசியமானதாகும்.இன்று சில செய்தியாளர்கள் உண்மையை திரிவுபடுத்தி வெளியிடுகின்றனர். இதனை தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத போக்கை கடைப்பிடிக்க முடியும் என கூறினார்.
No comments