Breaking News

கற்பிட்டி அல் அக்ஸா சுற்றாடல் குழுவின் 15 மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

(கற்பிட்டி - எம்.எச். எம் சியாஜ்)

கல்வி அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும்  இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் " சுற்றாடல் எம்மை காக்கும் - நாம் சுற்றாடலை காப்போம் " என்ற மகுடத்திற்கு அமைய அறிமுகப்படுத்தியுள்ள சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்திலேயே 2023 ம் வருடத்திற்கான தங்கப்பதக்கம் வென்ற ஒரே ஒரு பாடசாலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையாகவும் இதிலிருந்து நிகழ்ச்சி திட்டத்தில் பங்கு பற்றிய 15 மாணவர்களும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 


தங்கப்பதக்கம் வென்றவர்களின் விபரம் : எம்.எச்.எப் ஹனா இம்ன், எம்.ஆர் சேஹா சீனத், எம்.எச்.எப் றுஷ்தா இமா, எம்.எம்.மொஹமட், எம். டி. எம் அபாத், எம்.ஆர். அத்தாஸ் அஹமத், எம்.டி அப்ரத், எம்.எப் ஆனிஷா செய்னப், எம்.எச் ஆயிஷா ஸமா, எம்.எம் அம்மார் றிலா, எம்.எஸ்.எம் அப்ரிஸ், எஸ். கிரிஷாந், எம்.எஸ் ஷாபிக், எம்.எப் செயிட், எஸ்.இதர்ஷனன். ஆகியோர்  கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இந்த சுற்றாடல் குழுவிற்கு பொறுப்பாக ஆசிரியர் எம். ஆர் இர்ஷாத் மற்றும் இவர்களை வழிநாத்திய ஆசிரியை திருமதி ஏ.ஏ இன்ஷிபா ஆகியோர்.


மேலும் இம் மாணவர்களை பரீட்சிக்கும்  பரீட்சார்த்த குழுவில் வலய கல்விப் பணிமனை அதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர், மாவட்ட ஆலோசகர், வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர், ஆகியோர் இடம்பெற்றிருந்ததாக  மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஏ.எச்.எம்.எம் ஷாபி தெரிவித்தார்.




No comments

note