முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் விவாக பதிவாளராக றிபாஸ் மௌலவி நியமனம்
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த அகில இலங்கை சமாதான நீதவான் மௌலவி லெப்பை தம்பி றிபாஸ் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் விவாக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதிவாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜேசிங்கவினால் வழங்கப்பட்ட முஸ்லிம் விவாக பதிவாளருக்கான நியமனக் கடிதத்தை, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஏ.உமா மாஹேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை (06) மௌலவி லெப்பை தம்பி றிபாஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.முபாரக், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஏ.றௌசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரான மௌலவி லெப்பை தம்பி றிபாஸ் காஸமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான "சில்சிலா" வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.
அத்துடன், சமூக சேவைகளை முன்னெடுக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து தொண்டராக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர், முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
இவர் முல்லைத்தீவு - ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி - ஆமினா உம்மா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments