கடையாமோட்டை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை பயிற்சியளிப்பும், மேலங்கி அன்பளிப்பும்.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை சம்பந்தமான செயலமர்வும், மேலங்கி அன்பளிப்பும் இன்று (13) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ளிவ்.கே.ஜீ. விக்கிரமரத்ன அவார்களின் வழிகாட்டலின் கீழ் மதுரங்குளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி டப்ளிவ்.எம்.சந்திரதிலக்க மற்றும் எம்.ஏ.எம்.அம்ஜத் ஆகியோர் பாடசாலைக்கு சமூகமளித்து மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை சட்டதிட்டங்கள் சம்பந்தமான செயலமர்வு ஊடாக பயிற்சியளித்தனர்.
இதேவேளை மாணவர்களுக்கு தேவையான வீதியில் பயன்படுத்தப்படும் மேலங்கியும், சமிச்சை பலகையும் (Sign Board) வழங்கி வைத்தனர்.
KMCC (NS) MEDIA UNIT
No comments