Breaking News

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தகங்கள் அன்பளிப்பு!.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 08.10.2023 புத்தளம் வேப்பமடு அல் அரபா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.


இவ் அன்பளிப்புக்கள் உளவியல் ஆலோசகர், CBS நிறுவனத்தின் ஸ்தாபகர், Amazon கல்லூரியின் பணிப்பாளர், பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர். இல்ஹாம் மரிக்கார் அவர்களினால் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் மஸ்கூறா ஆரிப் ஊடக வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் பெற்றோர்களுக்கு குழந்தை உளவியல் பற்றிய பயிற்சியும் நடாத்தப்பட்டது.


குழந்தைகள் அதிகமாக தண்டிக்கப்படுவதால் அவர்களுக்கு உள ரீதியான பல தாக்கங்கள் ஏற்படுவதாகவும் இதனால் அவர்கள் ஏனைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுவதாகவும் வலியுறுத்தினார்.








No comments

note