நாளை இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2023
நாளை, 11ம் திகதி 2023 (புதன் கிழமை), தெஹிவளை S.De.S Jayasinghe மண்டபத்தில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கில்
1. 2030ல் அதி கூடிய கேள்வி மிக்க தொழில்கள்
2. பட்டப் படிப்பின் முக்கியத்துவம்
3. குறைந்த செலவில் வெளிநாடுகளில் படிப்பதற்கான வழிகாட்டல்
4. வெளிநாடுகளில் மருத்துவத்துறையில் படிப்பதற்கான வழிகாட்டல்
5. உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தேர்வு செய்வது?
6. மத்திய கிழக்கு நாடுகளில் வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
7.சிறந்த CV ஐ தயாரிப்பது எப்படி?
போன்ற மிக சிறந்த இன்னும் பல சுவாரஷ்யமான தலைப்புக்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கு உளவியல் ஆலோசகர், CBS நிறுவனத்தின் ஸ்தாபகர், அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், பேராதனை பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளர் திரு.இல்ஹாம் மரிக்கார் அவர்களினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின் பங்காளர்களாக Active Counsellors Forum, All Ceylon Peace Foundation, CBS Foudation மற்றும் JMR Academy ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.
கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சான்றிதழ் வழங்கப்படுவதோடு உங்கள் எதிர்கால சந்தேகங்களுக்கும் பதில் வழங்கப்படும்.
எனவே, இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது கலந்து பயன்பெறுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் : +94770822218
No comments