சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்தேசிய மட்டத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற பிரதீபா போட்டியின் இந்த வருடத்துக்கான (2023) போட்டியில், சித்திரம் வரைதல் மாகாண மட்டப் போட்டிகளின் முடிவுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியாகியது.
இதன்பிரகாரம் இந்தப் பிரதீபாப் போட்டிகளில் நாடுபூராகவும் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் அனைத்துப் பிரிவுகளிலும் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
இக்கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் முதல் முறையாக சிரேஷ்ட பிரிவில் கலந்துகொண்டு மாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.
இது சாய்ந்தமருது வரலாற்றில் பாரியதொரு வெற்றியாகும். சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து சில காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த மத்திய நிலையங்களை வீழ்த்தி இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
இந்த சித்திரப் போட்டியில் கலந்து வெற்றியீட்டிய சித்திரப் பாடநெறி மாணவர்களான எம். எல். பாத்திமா ஜியா முதலாம் இடத்தையும் ஜே. றின்சான் இரண்டாம் இடத்தையும் பெற்று, கலாசார மத்திய நிலையத்திற்கும் ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இவ்வெற்றிக்காக பின்புலமாக இருந்து செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளரான, ஐ.எம். சியாம் (ஆசிரியர்) மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்ஏ.பி. நௌசாத் ஆகியோர் உட்பட இம்மாணவர்களைப் போட்டியில் பங்குபற்ற அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்கு பற்றி பாடுபட்ட அனைவருக்கும் இவ்வெற்றிக்காக முழுமூச்சாகவும் பக்க பலமாகவும் இருந்து மாணவர்கள் மத்தியில் அயராது செயற்பட்டு காரணகர்த்தாவாகவும், உந்து சக்தியாகவும் அமைந்த நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் கலாசார மத்திய நிலையம் சார்பாக நன்றியோடு கூடிய வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
No comments