Breaking News

மண்சரிவின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் முயற்சியில் மொரோக்கோ மீட்புப் பணியில்

மண்சரிவின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் முயற்சியில் மொரோக்கோ மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில கிராமங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் இதுவரை இரண்டாயிரத்து 122 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரத்து 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-ஹோஸ் மாகாணத்தின் இரண்டு கிராமங்ளில் மாத்திரம் ஆயிரத்து 351 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.




No comments

note