Breaking News

கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மற்றுமொரு விடுதி நாரஹேன்பிட்டியில்

கொழும்புப் பல்கலைக்கழ மாணவர்களின் விடுதி வசதிக்காக நாரஹேன்பிட்டி- காலிங்க மாவத்தையில் 144 அறைகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீடமைப்புத் தொகுதியை கொழும்பு பல்கலைக்கழத்திடம் ஒப்படைப்பதற்காக இந்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 800 மாணவர்களுக்கு விடுதி வசதியை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments

note