Breaking News

புத்தளம் அசோசியேஷன் கத்தாரின் பேட்மிண்டன் போட்டி : மாவனல்லை சாஹிரியன்ஸ் அணி வெற்றி

நூருல் ஹுதா உமர்

கத்தாரில் உள்ள இலங்கையர்களுக்காக புத்தளம் அசோசியேஷன் கத்தார் ஏற்பாடு செய்த ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி ADDON IT PBL சீசன் 1 போட்டி ஆல்பா கேம்பிரிட்ஜ் பாடசாலை விளையாட்டு அரங்கில் புத்தளம் அசோசியேஷன் கத்தார் தலைவர் புர்ஹான் தலைமையில் நடைபெற்றது.


இப்போட்டியில் 18 அணிகள் பங்கேற்றன. அதில் இறுதிப்போட்டிக்கு மாவனல்லை சாஹிரியன்ஸ் அணி மற்றும் கண்டி வாரியர்ஸ் அணியும் தெரிவு செய்யப்பட்டது. இறுதிப்போட்டியில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டி மாவனல்லை சாஹிரியன்ஸ் அணி வெற்றிபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ADDONit நிறுவனத்தின் பணிப்பளார் ஷாஹித் சாராபாத், கௌரவ அதிதியாக லக்சிரிசேவா கார்கோ நிறுவனத்தின் பணிப்பளார்  ஹிபத்துல்லா பாரூக், செயலாளர் ரஸ்லான் ஆக்கிப் மற்றும் நிர்வாக உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.









No comments

note